தொழுகை
தொழுகை
அல்லாஹுதஆலாவின் வல்லமையிலிருந்து நேரடியாகப் பலனடைந்துக் கொள்ள அல்லாஹுதஆலாவின் கட்டளைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழி நின்று நிறைவேற்றுவதில், அனைத்தையும் விட மிக முக்கியமான அடிப்படை வாய்ந்த அமல் தொழுகையாகும்.
1.
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : இஸ்லாத்தின் அடிப்படை ஐந்து தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ். (அல்லாஹுதஆலாவைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை : முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுதஆலாவின் திருத்தூதர்) என்று சாட்சி கூறுவது: இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவது; ஜகாத்தை நிறைவேற்றுவது; ஹஜ் செய்வது; ரமலானில் நோன்பு நோற்பது என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
(நூல்: புஹாரி)
2.
ஹஜ்ரத் ஜுபைர் இப்னு நுஃபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நான் பொருள் சேகரிக்க வேண்டுமென்றோ, வியாபாரியாக வேண்டுமென்றோ எனக்குக் கட்டளையிடப்படவில்லை. எனினும், உமது இரட்சகனை நீங்கள் புகழ்ந்து தொழக் கூடியவர்களில் நீங்கள் சேர்ந்து இருங்கள்; மேலும் உங்களுக்கு மரணம் வரும்வரை, உமது இரட்சகனை வணங்குவீராக என்றே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்.
(நூல் : ஷரஹுஸ்ஸுன்னா , மிஷ்காத்துல் மஸாபீஹ்)
0 comments: