இல்மும் திக்ரும்

அல்லாஹூ தஆலாவிடமிருந்து நேரடியாக பிரயோஜனம் அடைந்து கொள்ள அல்லாஹூ தஆலாவின் ஏவல்களை முஹம்மது (ஸல்) அவர்களின் வழி நின்று பூர்த்தியாக்கும் நோக்கில் இறைநேசர்கள் கல்வியைக் கற்றுக் கொள்வது ( இந்நிலைமையில் ) அல்லாஹ் என்னிடமிருந்து என்ன விரும்புகிறான் என்று ஆய்வு செய்வது.

1.     அல்லாஹூ தஆலா எனக்குக் கொடுத்தனுப்பிய அறிவு, நேர் வழிக்கு உதாரணம், பூமியில் நன்றாகப் பொழிந்த மழையைப் போன்று ( மழை பொழியப்பட்ட பூமி மூன்று விதமாக இருக்கிறது ) அதன் ஒரு பகுதி அது தண்ணீரைத் தனக்குள்ளே இழுத்துக் கொண்டு எராளமான புற்பூண்டுகளையும் தாவரங்களையும் முளைக்கச் செய்தது, பூமியின் (மற்றொரு ) பகுதி கடினமானது. (அது தண்ணீரைத் தன்னுள் உறிஞ்சிக் கொள்ளவில்லை. எனினும்) தனக்கு மேல் தண்ணீரைச் சேகரித்துக் கொண்டது. அல்லாஹுதஆலா  அதிலிருந்தும் மக்களுக்கு பிரயோஜனம் அளிக்கச் செய்தான், அவர்கள் தாங்களும் குடித்து (உயிரினங்களுக்கும்) புகட்டி, வயல்களுக்கும் பாய்ச்சினார்கள்.

நீரைத் தேக்கிக் கொள்ளாத புற்பூண்டுகளை முளைக்கச் செய்யாத பொட்டல் மைதானத்தில் மழை பெய்தது, (இவ்வாறே மக்களும் மூன்று விதத்தினராக இருக்கிறார்கள்) முதல் வகை மனிதர் தீனில் விளக்கம் பெற்றவர்.  அல்லாஹூ தஆலா எனக்குக் கொடுத்தனுப்பிய நேர்வழியைக் கொண்டு அவருக்கும் பயன் அளித்தான் . அவர் தாமும் கற்றுப் பிறருக்கும் கற்று கொடுத்தார். இரண்டாம் வகை மனிதர், பலன் பெறவில்லை எனினும், மற்றவர்கள் அவர் மூலம் பிரயோஜனம் பெற்றார்கள்.மூன்றாம் வகை மனிதர், நான் கொண்டுவந்த இல்மை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அல்லாஹுதஆலா எனக்கு வழங்கியுள்ள நேர்வழியையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 


                                               (நூல்: புஹாரி)



2.  ஹஜ்ரத் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : உங்களில் (எல்லோரையும் விட) சிறப்பிற்குரியவர் குர்ஆனைக் கற்று (பிறருக்கு) கற்றுக் கொடுப்பவராவார் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.


                                                 (நூல் : திர்மிதீ)

0 comments: